சாம்பியன் பட்டத்தை வென்ற பின் ஹர்பஜன் போட்ட ட்வீட்!

  கனிமொழி   | Last Modified : 28 May, 2018 02:18 pm


இரண்டு வருடம் தடை முடிந்து மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிய சி.எஸ்.கே தான் விளையாடிய ஒவ்வொரு மேட்சையும் சுவாரஸ்மாகக் கொண்டுச் சென்று பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் சந்தித்தது. ஃபைனலில் ஹைதராமாத் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதனால் சி.எஸ்.கே ரசிகர்களும் வெற்றிக்காக விளையாடிய வீரர்களும் செம்ம ஹேப்பி அண்ணாச்சி.

மும்பை அணி 11 சீசனில் விளையாடி மூன்று முறை சாம்பியன் கோப்பையைக் கைப் பற்றியிருக்கிறது. ஆனால் சென்னை மொத்தம் 9 சீசனில் விளையாடி மூன்று முறை சாப்பியன் ஆகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வழக்கம் போல் தன்னுடைய மகிழ்ச்சியை தமிழில் ட்வீட் செய்து கொண்டாடும் ஹர்பஜன் சிங், இந்த முறையும் அதனை மறக்க வில்லை.

"தோட்டாவென கிளம்பிய பந்துகள். கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம். எமை அடித்து,அழுத்தி ஆட(ள) முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம்.மக்களை வென்றதே நமது வெற்றி.சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி" என நேற்று இரவும், 

"கிட்டத்தட்ட ஐபில் ஏலம் நடக்க 3/4 மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இந்த விசயத்த இப்போ அது நிதர்சனம். நம்பிக்க வெச்சா எதுவும் சாத்தியம். வேர்வை சிந்தி உழைச்சா எந்த இலக்கையும் அடைய முடியும் என்னோட 4th @ipl கப் @ChennaiIPL காக #WhistlePodu  கோப்பை வெல்ல ஓங்கிய கைகள் #எதிர்காலம்" என்று இப்போதும் ட்வீட் செய்திருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close