அப்கானிஸ்தான் டெஸ்ட்: சஹா விலகல், தினேஷ் காத்திக்கிற்கு வாய்ப்பு?

Last Modified : 29 May, 2018 10:42 am

பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து சஹா விலகுகிறார். 

சமீபத்தில் அப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இதனையடுத்து அந்த அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விருதிமான் சஹாவுக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் சரியாக இன்னும் சில காலம் தேவைப்படும் என்பதால் அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் அல்லது பாதீவ் பட்டேலை பிசிசிஐ தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close