ஆப்கான் டி20 தொடர்: வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் விலகல்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 11:05 am


ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விலகியுள்ளார். 

ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. டேராடூனில் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. 

இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியின் போது வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் தனது அணியுடன் டேராடூனுக்கு பயணம் செய்யவில்லை. இரண்டு அல்லது மூன்று வார ஓய்வுக்கு பின் முஸ்தாபிசுர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close