டி20 போட்டி: உலக லெவன் அணியில் பாண்டியாவுக்கு பதில் ஷமி

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 11:18 am


உலக லெவன் டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் முகமது ஷமி இணைக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 31ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கான உலக லெவன் அணியில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருந்தார். ஆனால், வைரஸ் காய்ச்சலால் பாண்டியா இப்போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாண்டியாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அடில் ரஷீத் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

உலக லெவன் அணி: இயான் மோர்கன் (கேப்டன்), ஷாஹித் அப்ரிடி, தமீம் இக்பால், தினேஷ் கார்த்திக், ரஷீத் கான், சந்தீப் லாமிச்சனே, மிட்செல் மெக்லேனகன், ஷோயப் மாலிக், திசாரா பெரேரா, லுக் ரோஞ்சி, அடில் ரஷீத், முகமது ஷமி.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close