பிரெஞ்சு ஓபன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு திரும்பினார் செரீனா வில்லியம்ஸ்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 02:02 pm


மூன்று முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இன்று நடக்கும் பிரெஞ்சு ஓபன் துவக்க போட்டியின் மூலம் மீண்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு திரும்புகிறார். 

செக் குடியரசின் கிரிஸ்டினா பிளிஸ்க்கோவாவை, தனது முதல் போட்டியில் செரீனா எதிர்கொள்ள இருக்கிறார். 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தை தனது இரண்டு மாத கருவுடன் பெற்ற பின், பிரசவத்திற்காக டென்னிஸ் போட்டியில் இருந்து விலகி இருந்தார் செரீனா. அதன் பிறகு அவர் மீண்டும் முன்பு போல் வெற்றி வீராங்கனையாக வலம் வர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் அவர் பங்கேற்க இருக்கும் பிரெஞ்சு ஓபன் போட்டியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனாவுக்கு இன்னும் ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் தான் தேவையாக உள்ளது. முன்னாள் வீராங்கனை மார்கரெட்டை முறியடிக்க. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close