பிரெஞ்சு ஓபன்: வாவ்ரிங்கா அவுட், ஜோகோவிச் இன்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 03:50 pm


முன்னாள் சாம்பியன் ஸ்டான் வாவ்ரிங்கா துவக்க போட்டியிலேயே பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து வெளியேறினார். 

ரோலண்ட் கர்ரோஸில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில், ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 2-6, 6-3, 6-4, 6-7 (5/7), 3-6  என்ற கணக்கில் ஸ்பெயினின் கில்லர்மோ கார்சியா- லோபெஸால், தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

காயத்தால் அவதிப்பட்டு வந்த முன்னாள் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் பிரேசிலின் ரோகேரியோ துற்றாவை தோற்கடித்தார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி 7-6 (7/2), 6-1 என அமெரிக்காவின் கொலின்ஸை வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close