வரலாற்று டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 04:41 pm


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தாங்கள் சந்திக்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.

ஐசிசி-யால் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை, பெங்களூருவில் எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான். இப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆப்கானுக்கு எதிராக விராட் பங்கேற்காததால், ரஹானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டி விளையாடும் 12-வது அணி என்ற பெயரை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. 

இந்திய அணி: அஜின்க்யா ரஹானே (கேப்டன்), சேடேஸ்வர் புஜாரா, ஷிகர் தவான், முரளி விஜய், கே.எல். ராகுல், கருண் நாயர், வ்ரிதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்தர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர்.

ஆப்கானிஸ்தான் அணி: அஸ்கர் ஸ்டானிக்சை (கேப்டன்), முகமது ஷாஹ்சாட் (விக்கெட் கீப்பர்), ஜாவேத் அஹ்மதி, இஹசனுல்லாஹ் ஜன்னத், ரஹ்மத் ஷாஹ், நசீர் ஜமால், ஹஹ்மதுல்லாஹ் ஷாஹிதி, அப்சர் சாசாய் (விக்கெட் கீப்பர்), மோஹட் நபி, ரஷீத் கான், ஜாஹிர் கான், ஹம்சா ஹோடக், சயீத் ஷெர்சாட், யாமின் அஹ்மட்சாயி, வபாதர் மொமண்ட், முஜீப் உர் ரஹ்மான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close