கோலி தலைமையில் இந்திய அணி இப்படி ஆகிவிட்டது : கேரி கிர்ஸ்டன்

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 09:40 am

விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கருத்து கூறியுள்ளார். 

30 வருடங்களாக கிரிக்கெட் வீரராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் இருந்து வருபவர் கேரி கிர்ஸ்டன். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம் பிடிப்பதற்கும், உலக கோப்பையை வெல்வதற்கும் வீரர்களை தயார் படுத்திய இவரை குரு கிர்ஸ்டன் என்று பாசமாக அழைக்கின்றனர். 

இவர் தற்போது ஐபில் தொடரில் பெங்களூரு அணியின் பேட்டிங் கோச்சாக இருக்கிறார். ஐபிஎல் தொடர் முடிந்துவிட்ட நிலையில் கோச்சின் கடமை, இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளது. 

அவர் கூறும் போது, "கோச் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவராக கூட இருக்கலாம். விளையாட்டு என்பதை  எல்லைகள் கடந்தது. அது போல தான் பயிற்சியாளர்களும். 

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு குணம் உண்டு. இந்த வீரர்கள் சமீப காலத்தில் களத்தில் போட்டி குணத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனை நாம் தவறாக புரிந்து கொள்கிறோம். எதிர் அணியினர் மீது வெறியை காட்டினால் தான் தவறு போட்டியாகவும் கிரிக்கெட்டில் இருக்கும் அதிகபடியான ஆர்வத்தையும் காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இந்த வித்தியாசம் விராட் கோலிக்கு பிறகு தான் நிகழ்ந்துள்ளது. 

கோலியையும் தோனியையும் ஒப்பிடுவது சரியல்ல. இருவரும் வெவ்வேறு விதமான தலைமை பண்பை கொண்டவர்கள். இது அவர்களை மைதானத்தில் பார்க்கும் போதே வெளிப்படையாக தெரிகிறது. இவருவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இருவரும் நல்ல வீரர்கள் என்பது மட்டுமே. 

இதே போல சச்சினுடன் கோலியை ஒப்பிடுகிறார்கள். இதுபோன்ற ஒப்பீடுகளை தாண்டி அவர் முன்னேற வேண்டும் . அவருக்கென்ற தனி ஸ்டைல் உள்ளது" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close