பிரெஞ்சு ஓபன்: செரீனா, ஷரபோவா, நடால் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 01:34 pm

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் கம்பேக் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்றுள்ளார். 16 மாதங்களுக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுவாகும். துவக்க போட்டியில் செக் குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்க்கோவாவை எதிர்கொண்ட செரீனா, 7-6 (7-4), 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். தனது இரண்டாவது சுற்று போட்டியில் செரீனா, ஆஸ்திரேலியாவின் அஷ்லே பார்டியை எதிர்கொள்கிறார். 

இதேபோல மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் விளையாடிய ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 6-1, 4-6, 6-3 என டச் வீராங்கனை ரிசெலை தோற்கடித்தார். இரண்டாவது சுற்று போட்டியில் ஷரபோவா, குரோவேஷியாவின் டோனா வெக்கிக்கை சந்திக்கிறார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு துவக்க ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால், 6-4, 6-3, 7-6 (9) என்ற கணக்கில் சிமோன் பொல்லெலியை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் நடால், கைடோ பெல்லாவை எதிர்கொள்கிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close