ஐபிஎல் போல இதையும் பாருங்க: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்!

  Newstm News Desk   | Last Modified : 03 Jun, 2018 02:06 pm

virat-kohli-urges-fans-to-support-indian-football-team

கிரிக்கெட்டை போல கால்பந்து விளையாட்டுக்கும் அதரவு கொடுங்கள் என ரசிகர்களுக்கு விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் ஆதரவு வேறு எந்த விளையாட்டுக்கும் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக உலக முழுவதும் கொண்டாடப்படும் கால்பந்துக்கு இந்தியாவில் மவுசு குறைவு தான். இந்தியாவில் கால்பந்து அணி இருக்கிறது என்பது கூட பலருக்கு தெரியாது. 

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணி முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் மக்களின் ஆதரவை பெறுவதற்காக இந்தியாவில் ஐஎஸ்எல் என்னும் உள்நாட்டு கால்பந்து தொடரும் நடந்து வருகிறது. ஆனால் ஐபிஎல் போன்ற போட்டிகளை கணக்கி எடுத்து கொள்ளும் போது ஐஎஸ்எல் தொடருக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை. 

சர்வதேச தரவரிசையில் தற்போது 97வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இதற்கு முன்னர் 130வது இடத்தில் இருந்த இந்திய அணி இந்த இடத்திற்கு வர காரணம் கேப்டன் சுனில் சேத்ரி. 

தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.

இப்படி சாதனை செய்தும் தற்போது சுனில் வருத்தத்தில் உள்ளார். காரணம் அந்தபோட்டியை பார்க்க அவ்வளவாக ரசிகர்கள் வரவில்லை. இதனையடுத்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில், "ஐரோப்பிய கால்பந்து கிளப் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எதிர்பார்க்கும் தரமில்லாததை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள். ஒத்துக்கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயணக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.

இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். இந்திய கால்பந்து அணியின் வளர்ச்சிக்கு ரசிகர்கள் நிச்சயம் தேவை" என்று பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சுனிலுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். "இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளும் ஒரே மாதிரியான வரவேற்பை பெற வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என அவர் அதில் தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close