ஃபோர்ப்ஸின் டாப் 100 லிஸ்டில் இடம் பிடித்த விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2018 12:57 pm

virat-kohli-only-indian-on-forbes-top-100-list

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் பெரும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். 

விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம் பெற்ற ஒரே ஒரு வீரர் விராட் கோலி தான். 83-வது இடம் வகிக்கும் கோலி, 24 மில்லியன் டாலரை சம்பளமாக பெறுகிறார். இந்த பட்டியலின் டாப் 100-ல் ஒரு விளையாட்டு வீராங்கனை பெயர் கூட இடம் பெறாதது ஆச்சரயமடையச் செய்துள்ளது. 

2018 உலகின் அதிக சம்பளம் பெரும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் மேவெதர் (41 வயது) முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 285 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்று வருகிறார். கடந்த 7 வருடங்களில் நான்காவது முறையாக மேவெதர் முதலிடம் பெற்றுள்ளார்.

"இந்திய வீரர் கோலி இந்த ஆண்டு பிசிசிஐ-ன் ஏ கான்ட்ராக்ட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் வருடத்திற்கு 1 மில்லியன் டாலர் பெறுகிறார். இதுதவிர, புமா, பெப்சி, ஆடி, ஓக்லே ஆகிய நிறுவனங்களுடன் கோலி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். 

ஃபோர்ப்ஸ் இதழில் தொடர்ந்து இடம் பெற்று வந்த டென்னிஸ் வீராங்கனை ரஷ்யாவின் மரியா ஷரபோவா, ஊக்கமருந்து விவகாரத்தில் தடை செய்யப்பட்டதால், அவர் இடம் பெறவில்லை. மேலும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மகப்பேறு காரணமாக விளையாடாததால், பட்டியலில் இடம் பெறவில்லை என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டாப் 100ல் இடம் பெற்ற ஒரே ஒரு விளையாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

இந்த ஆண்டு பட்டியலில் 40 கூடைப்பந்து (என்பிஏ) வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். 32 வீரர்கள் இடம் பெற்றிருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது முறியடிக்கப்பட்டது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (111 மில்லியன் டாலர்), இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (108 மில்லியன் டாலர்) இருக்கிறார். பிரேசிலின் நெய்மார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

22 நாடுகளை சேர்ந்த வீரர்களை கொண்டு டாப் 100 பட்டியலை ஃபோர்ப்ஸ் தேர்வு செய்தது. இதில் பெரும்பாலும் அமெரிக்கர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.   

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close