உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு 5 பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 01:54 pm
india-bags-5-medals-in-first-day-at-issf-wc

ஜெர்மனியின் சுஹல் நகரில் 2018 ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியாவின் நேஹா, அன்மோல் ஜெயின், தேவன்ஷி தாமா ஆகியோர் தனிப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர். 

இதன் மூலம் துவக்க நாள் போட்டியில் இந்தியாவுக்கு, 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கம் கிடைத்தன. 50மீ ஜூனியர் பிஸ்டல் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இருந்து இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்கள் பெறப்பட்டன. இதன் மூலம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

ஆண்களுக்கான ஜூனியர் தனிப்பட்ட போட்டியில், அன்மோல் 549 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து, வெண்கலம் பெற்றார். ரஷ்யாவின் மிகைல் இசைகோவ் (553 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், சீனாவின் செஹாவ் வாங் (550 புள்ளிகள்) வெள்ளி பதக்கமும் வென்றனர்.

அர்ஜுன் சிங் சீமா (548) 4-வது, கவுரவ் ராணா 5-வது இடத்தையும் பெற்றனர். இவர்களுடன் இணைந்து அணிகள் பிரிவில் போட்டியிட்ட அன்மோல், தங்கப்பதக்கத்தை வென்றார். ரஷ்யா மற்றும் இத்தாலி, வெள்ளி மற்றும் வெண்கலத்தை பெற்றன. 

மகளிர் பிரிவில், தனிப்பட்ட போட்டியில், இந்தியாவின் நேஹா 528 புள்ளியுடன் வெள்ளிப்பதக்கமும், தேவன்ஷி தாமா 527 புள்ளியுடன் வெண்கலமும் வென்றனர். பெலாரஸின் யூலியான ரோஹச் 530 புள்ளியுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 

மகளிர் குழு பிரிவில், இந்தியா 1565 ஒட்டுமொத்த புள்ளியுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. ரஷ்யா மற்றும் உக்ரைன், 2-வது, 3-வது இடங்களை பிடித்தன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close