உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் சௌரப் தங்கம் வென்றார்

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 12:54 pm

saurabh-chaudhary-wins-gold-at-junior-issf-wc

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில் 16 வயதான இந்திய வீரர் சௌரப் சவுதிரி தங்கப்பதக்கம் வென்றார். 

ஜெர்மனியின் சுஹல் நகரில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட இந்திய வீரர் சௌரப் சவுதிரி, 243.7 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவுக்காக சௌரப் சவுதிரி வெல்லும் 8-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 

கொரியாவின் லிம் ஹோஜின் (239.6) வெள்ளி, சீனாவின் வாங் செஹாவ் (218.7) வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் 5-வது இடத்தையும், தேவன்ஷி ராணா 8-வது இடத்தையும் பிடித்தனர். 

ஆண்களுக்கான 25மீ ஏர் பிஸ்டல் குழு பிரிவு போட்டியில், இந்தியாவின் உதயவீர், விஜயவீர் சித்து, ராஜ்கன்வர் சிங் ஆகியோர் தங்கம் வென்றனர். இதே பிரிவில், தனிப்பட்ட முறையில் உதயவீர் வெண்கலம் பெற்றார். 

இந்தியா தற்போது 8 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close