தேசிய சாதனையை முறியடித்த இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 03:27 pm
dutee-chand-breaks-100m-national-record

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் சாதனை படைத்துள்ளார். 

கவுகாத்தியில் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் மகளிருக்கான 100மீ ஓட்டப்பந்தயத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டூட்டி சந்த், 11.29 விநாடிகளில் கடந்து, தங்கப்பதக்கம் வென்றார். ரங்கா (11.70s) 2-வது இடத்தையும், ரீனா ஜார்ஜ் (11.77s) 3-வது இடத்தையும் பிடித்தனர். 

சந்த், தன்னுடைய முந்தைய இலக்கை 11.30 விநாடிகளில் கடந்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும், இப்போட்டியில் முதலிடம் பிடித்த சந்த், ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடக்க இருக்கும் ஆசிய தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். இது தவிர சந்த், ஆசிய தொடருக்கான 200மீ ஓட்டபயந்தய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close