ட்ராவிட்டுக்கு ஹால் ஆஃப் பேம் வழங்கி கவுரவித்த ஐசிசி

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Jul, 2018 08:55 am
dravid-ponting-and-taylor-inducted-into-icc-cricket-hall-of-fame

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்டுக்கு ஐ.சி.சி. "ஹால் ஆஃப் பேம்" கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை "ஹால் ஆஃப் பேம்" மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட்டுக்கு "ஹால் ஆஃப் பேம்" கவுரவம் கிடைத்துள்ளது. 

இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 288 ரன்கள் குவித்துள்ளார் ட்ராவிட். இதே போல் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ட்ராவிட் 10 ஆயிரத்து 889 ரன்கள் சேர்த்துள்ளார். தடுப்பாட்டத்தில் சிறந்தவரான ட்ராவிட் பேட்டிங்கில் இந்திய அணியின் சரிவை தடுக்கும் தடுப்புச்சுவர் என்றழைக்கப்பட்டவர். அவருக்கு கிரிக்கெட்டின் மிக உயரிய கவுரமான "ஹால் ஆஃப் பேம்" கிடைத்துள்ளது. இந்த பெருமையை பெரும் ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட். இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த பிஷன் சிங் பேடி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர். 

இந்தாண்டு "ஹால் ஆஃப் பேம்" கவுரவம் ராகுல் ட்ராவிட், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை க்ளேர் டெய்லர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close