ஆசிய போட்டியில் 524 இந்திய வீரர்கள் பங்கேற்பு!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 04:52 pm
524-indian-athletes-to-participate-in-asian-games

ஆசிய போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க 524 பேரை தேர்வு செய்துள்ளது இந்திய ஒலிம்பிக் சம்மேளனம்.

இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை 18-வது ஆசிய போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா சார்பில் 524 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது. 36 விளையாட்டு பிரிவுகளில், 277 ஆடவர் மற்றும் 247 மகளிர் பங்கேற்கின்றனர். 

2014ம் ஆண்டு இன்ச்யோன் ஆசிய போட்டியில், 28 பிரிவுகளுக்காக 541 இந்திய தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றன.

இந்த முறை, கராத்தே, குராஷ், பென்காக் சிலேட், ரோலர் ஸ்கேட்டிங், சம்போ, செபக்டாக்ரா, டிரையத்லான், சாஃப்ட் டென்னிஸ் ஆகிய 8 விளையாட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியா, ஆர்ச்சேரி, தடகள விளையாட்டுகள், பேட்மின்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, பந்துவீச்சு, கேனோ-கயாக் (குறுகிய தூர ஓட்டப்பந்தயம்), கேனோ-கயாக் (நீர்சறுக்கு), சைக்கிள் ஓட்டுதல், குதிரையேற்றம், ஃபென்சிங், ஜிம்னாஸ்டிக், கோல்ஃப், ஹாண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, கராத்தே, குராஷ், பென்காக் சிலேட், ரோலர் ஸ்கேட்டிங், படகுப்போட்டி, கப்பலோட்டுதல், சம்போ, செபக்டாக்ரா, துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ், நீர்வாழ் - நீச்சல், நீர்வாழ் - டைவிங், டென்னிஸ், டேக்வாண்டோ, டிரையத்லான், சாஃப்ட் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம், வுஷு ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது.

ஜூன் மாதம், இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் 2370 பேர் அடங்கிய பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதனின் இறுதி பட்டியலில், போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி அடிப்படையில் 524 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close