2 ஆண்டுகளுக்கு பின் ஜிம்னாஸ்டிக் களத்தில் தீபா கர்மாகர்

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 03:02 pm
dipa-karmakar-set-to-return-for-world-cup

முன்னணி இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், உலக கோப்பை போட்டிக்காக மீண்டும் களம் காண இருக்கிறார். 

துருக்கியின் மெர்ஸின் நகரில் ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கம் (எஃப்.ஐ.ஜி) நடத்தும் உலக கோப்பை 2018 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், இரண்டு ஆண்டுகளாக காயம் காரணமாக விலகியிருந்த இந்தியாவின் தீபா கர்மாகர் பங்கேற்க இருக்கிறார். 

எஃப்.ஐ.ஜி உலக கோப்பையில் வால்ட் மற்றும் பீம் பிரிவு போட்டிகளில் தீபா பங்கேற்கிறார். அவருக்கு துணையாக பயிற்சியாளர் பிஷேஸ்வர் நந்தி இருக்கிறார். 

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடித்த பிறகு, பயிற்சியின் போது தீபாவிற்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொண்டார் தீபா. அதன் பின், நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் பங்கேற்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.

இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம், தனது முதல் உலக கோப்பை புத்தகத்துக்கு தீபா முயற்சிப்பார்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close