அவதாரம் எடுக்கும் எம்.எஸ்.தோனி படத்தின் 2ம் பாகம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 04:06 pm
m-s-dhoni-in-biopic-sequel-begins-next-year

2016ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான எம்.எஸ்.தோனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,  நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த 2016ம் ஆண்டு எம். எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படம் வெளியானது. அந்த படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்  நடித்திருந்தார். 

தோனியின் சிறு வயது காலம் முதல் 2011ம் உலக கோப்பை வென்றது முதலானவை  அந்த படத்தில் காட்டப்பட்டு இருந்தது. இந்த படம் வசூலில் சாதனைப்படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

இதற்காக சுஷந்த் சிங் விரைவில் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தோனியின் திருமண வாழ்க்கை, கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக்  ஆகியவை இடம் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close