• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

2 ஆண்டுக்கு பின் களம் கண்டு தங்கம் வென்ற தீபா கர்மாகர்!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 12:44 pm

dipa-karmakar-wins-gold-medal-in-fig-artistic-gymnastics-world-challenge-cup

உலக சேலஞ் கோப்பை போட்டியில் இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தங்கம் வென்றார். 

துருக்கியின் மெர்ஸின் நகரில் இந்திய ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ் கோப்பை போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்த இந்தியா வீராங்கனை தீபா கர்மாகர் (24) பங்கேற்றார். உலக சேலஞ் கோப்பை வால்ட் பிரிவில் போட்டியிட்ட கர்மாகர், 14.150 புள்ளிகள் பெற்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது கர்மாகரின் முதல் உலக சேலஞ் கோப்பை ஆகும். 

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு காயம் காரணமாக இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்காத கர்மாகர், மீண்டும் களம் கண்டு தங்கம் வென்றதை, விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இந்தோனேசியாவின் ரிஃப்தா இர்ஃபானாலுத்ஃபி 13.400 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், துருக்கியின் கோக்ஸு உக்டஸ் சான்லி 13.200 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். 

ஆடவர் பிரிவில், இந்தியாவின் ராகேஷ் பத்ரா பதக்கத்தை தவறவிட்டார். துருக்கியின் இப்ராஹிம் கோலாக் தங்கம், ரோமானியாவின் ஆண்ட்ரே வஸ்ஸில் வெள்ளி, டச்சின் யூரி வான் வெண்கலமும் வென்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close