உலக ஜூனியர் ஸ்குவாஷ்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 05:05 pm
india-defeated-by-pakistan-in-world-junior-squash-championship

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா. 

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தனிநபர் பிரிவு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணிகளுக்கான பிரிவில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. 

முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானின் ஹாரிஸ் குவாஸிம் 8-11, 16-14, 11-6, 11-7 என்ற கணக்கில் இந்தியாவின் ராகுல் பைதாவை வென்றார். 2-வது ஆட்டத்தில், இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் யாஷ் ஃபாட்டை 6-11, 11-9, 12-10, 11-2 என அப்பாஸ் ஸிப் வீழ்த்தினார். 3-வது போட்டியில், வீர் சோதிராணி 12-10, 11-5 என முகமது உஸைரால் வீழ்த்தப்பட்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close