சர்வதேச வில்வித்தை தரவரிசையில் இந்திய மகளிர் அணி முதலிடம்

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 05:31 pm
indian-women-s-compound-team-claims-top-spot-in-aai-rankings

சர்வதேச வில்வித்தை தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணி முதலிடம் பிடித்துள்ளது. 

சர்வதேச வில்வித்தை சம்மேளனம் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இதனால் இந்திய மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணி, முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. சீன தைபே அணியை விட 6 புள்ளிகள் அதிகமாக பெற்று, இந்தியா (342.6 புள்ளி) 5-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 

வெள்ளிப் பதக்கத்தை வெல்வதற்கு முன், இந்திய அணி நான்கு உலக கோப்பை அரங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஜோதி சுரேகா, த்ரிஷா டெப், லில்லி சானு, முஸ்கன் கிறார், திவ்யா தயாள், மதுமிதா ஆகியோரே தரவரிசையில் ஏற்றம் கண்டனர். 

 

 

காம்பவுண்ட் கலப்பு பிரிவில், இந்திய அணி 5-வது இடத்தை திரும்ப பெற்றது. ரிகர்வ் கலப்பு அணி, 7-வது இடத்தில் இருக்கிறது. மகளிர் ரிகர்வ் அணி, 8-வது இடத்தில் நீடிக்கிறது. ஆடவர் ரிகர்வ் அணி, 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close