ஆசிய போட்டியில் இருந்து உலக சாம்பியன் மீராபாய் சனு விலகல்

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 04:56 pm
mirabhai-chanu-pulls-out-of-asian-games

ஆசிய போட்டியில் இருந்து உலக பளுதூக்குதல் சாம்பியன் மீராபாய் சனு விலகியுள்ளார். முதுகுவலி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் போட்டியில் சனுவால் பங்கேற்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜகார்தாவில் வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி ஆசிய போட்டிகள் தொடங்க இருக்கிறது. இப்போட்டியின் மூலம், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு, தகுதி பெறுவார்கள். இந்த நிலையில், இந்திய பளுதூக்குதல் சங்கத்தின் செயலாளர் ஸஹ்தேவ் யாதவ், "மீராபாய் சனு, ஆசிய போட்டியில் பங்கேற்க மாட்டார்" என்றார். தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மாவின் பரிந்துரையை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 1ம் தேதி முதல் அஸ்ஹகபாதில், முதல் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியான உலக சாம்பியன்ஷிப் நடக்க இருக்கிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close