தோனி போல தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் அதிரடி - வைரலாகும் மீம்ஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Mar, 2018 11:43 am

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்று சாதனை படைத்தது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின.

முத்தரப்பு டி20 போட்டியில் பங்களாதேஷூக்கு எதிராக நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அதிரடி காட்டிய தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அவர் 8 பந்துகளில் மூன்று சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன் குவித்தார்.

இதையடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் நெட்சிசன்களும், மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை அணியை வீழ்த்திய பின் வங்கதேச வீரர் ரஹீம் நாகினி ஆட்டம் போட்டார். ஆட்டம் அடங்கி போனதே என்று கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

சமூக வலைதளங்களில் தோனி போல தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் அதிரடியாக செயல்பட்டு கப்பை தட்டி சென்றார் என சில மீம்ஸ்களை அனல் பறக்கவிட்டுள்ளனர்.

முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷை வென்றதை அடுத்து ரசிகர்கள்  பாம்பு நடனத்தையும் பங்களாதேஷ் வீரர்களையும் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கும் வரை பங்களாதேஷ் வீரர்கள் அடிக்கடி பாம்பு நடனம் ஆடி மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

வெற்றியை தினேஷ் கார்த்திக் பக்கம் இழுத்ததை அடுத்து, பாம்பு அவரது மகுடிக்கு அடங்கிவிட்டதாக மீம்ஸ் பதிவிட்டுவருகின்றனர்.

இலங்கை வீரர்களுடன் பங்களாதேஷ் வீரர்கள் மோதலில் ஈடுபட்டதை அடுத்து இலங்கை ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அவர்கள், நேற்று இந்திய அணிக்கு ஆதரவளித்து பாம்பு நடனத்தை ஆடி மகிழ்ந்தனர்.

ஆக மொத்தம் தினேஷ் கார்த்திக்கு பாராட்டுகள், தமிழ் ரசிகர்களுக்கு பாம்பு டான்ஸ், மீம்ஸ் கிரியேட்டர்ச்களுக்கு கொண்டாட்டம்!

ஒரு வெற்றியை பெற்றுவிட்டு அதிகம் ஆடக் கூடாது என்பது வங்கதேச அணிக்கு இனியாவது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றபின் வங்கதேசம் போட்ட பாம்பு டான்ஸ் வெறுப்பின் உச்சம். அதன் பலனை நேற்று அந்த அணியினர் அனுபவித்தனர். இனியாவது திருந்தினால் சரி...

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்தியாவை காப்பாற்றிய தினேஷ் கார்த்திக் தமிழன் என்பதால், மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பட பாடலின் கடைசி தமிழனின் ரத்தம் எழும் என்ற வரியை வைத்து தமிழ் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கொண்டாடி வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close