இந்தியாவின் 53-வது செஸ் கிராண்ட்மாஸ்டரானார் நிஹால் சரின்

  Newstm Desk   | Last Modified : 15 Aug, 2018 05:02 pm
nihal-sarin-becomes-india-s-53rd-chess-grandmaster

14 வயது, ஒரு மாதம், ஒரு நாள், நிஹால் சரின் இந்தியாவின் 53-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார். 

25-வது அபு தாபி சர்வதேச செஸ் மாஸ்டர்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் ஒரு ரவுண்ட் மீதமுள்ள நிலையில், 9 போட்டிகளின் முடிவில் இந்தியாவின் நிஹால் சரின் 5.5 புள்ளிகள் பெற்றுள்ளார். இன்னும் ஒரு போட்டி இருந்தாலும், கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை சரின் அடைந்தார். இதனால் சரின், இந்தியாவின் 53-வது கிராண்ட்மாஸ்டர் ஆகிறார். கடந்த ஜூன் மாதம், பிரகானந்தா, இந்தியாவின் 52-வது கிராண்ட்மாஸ்டரானார்.

2013ம் ஆண்டு யுஏஇ-ல் நடந்த உலக யூத் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன் பிறகு, டர்பனில் நடைபெற்ற உலக யூத் செஸ் போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து ஆசிய யூத், உஸ்பேஸ்கிஸ்தானில் நடந்த பிளிட்ஸ் போட்டியில் தங்கம் வென்றார். 2015ல் கிரீஸின் போர்டோ கார்ரஸில் நடந்த யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close