கேரளாவிற்காக உதவுங்கள்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான்

  Newstm Desk   | Last Modified : 19 Aug, 2018 01:19 pm
rashid-khan-video-on-twitter-about-kerala-floods

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு உதவி செய்ய முன் வாருங்கள் என கூறி ஆப்கானிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வீடியோ வெளியிட்டுள்ளார். 

இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சந்தித்த வெள்ளத்தை விடவும் 3 மடங்கு அதிகமான வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கும் கேரளாவிற்கு உதவிட பலரும் முன் வந்துள்ளனர். மேலும் இந்த கேரள வெள்ளம் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது. 

பல வெளிநாட்டு ஊடகங்களும் இதுகுறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் இதுகுறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

அதில், "கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதில் பலர் பலியாகி உள்னர். மேலும் பலர் வீடுகளை இழந்துள்ளனர். கேரளாவை இந்த துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் கேரள கிரிக்கெட் வாரியம் இறங்கி உள்ளது. அவர்களுடன் நானும் இணைந்துள்ளேன். நீங்களும் உதவி செய்ய முன்வாருங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close