ஆசிய போட்டி: இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சூடு வீரர் லக்ஷய் வெள்ளி வென்றார்

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 05:09 pm
lakshay-wins-silver-in-men-s-trap-event-at-asian-games

இந்தியாவின் இளம் துப்பாக்கிச் சுடு வீரரான லக்ஷய், ஆசிய போட்டியில் ஆடவருக்கான ட்ராப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று ஆடவருக்கான ட்ராப் துப்பாக்கிச் சுடு போட்டியில், 19 வயதான லக்ஷய் 45 ஷாட்களில் 39 ஷாட் அடித்து 2ம் இடத்தை பிடித்தார். 

சீன தைபேவின் குன்பி யாங், தங்கப் பதக்கம் வென்றார். 48 ஷாட்கள் அடித்து சாதனையுடன் முதலிடம் பிடித்தார். கொரியாவின் தேமேயெவ்ங் அஹ்ன் வெண்கலம் பெற்றார். 

இந்தியாவின் மனவ்ஜித் சிங் சித்து போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். 

ஆசிய போட்டியில், துப்பாக்கிச் சுடு பிரிவில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close