இந்தியாவுக்கு 2-வது தங்கம்; மகளிர் மல்யுத்தத்தில் வினேஷ் போகாட் சாதனை

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 06:26 pm
vinesh-phogat-gets-2nd-gold-for-india-in-18th-asian-games

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தங்கம் வென்றார். 

இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடந்த மகளிருக்கான மல்யுத்த இறுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் வினேஷ் போகாட், 50 கிலோ எடை பிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் ஜெயித்தார். ஜப்பானின் யுகி ஈறியை 6-2 என்ற கணக்கில் வினேஷ் வென்று, முதலிடம் பிடித்தார். 

ஆசிய விளையாட்டு போட்டியில், மல்யுத்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய மகளிர் மல்யுத்த போட்டியாளர் வினேஷ் போகாட் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. முதல் தங்கப் பதக்கத்தை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வென்று கொடுத்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close