ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2018 11:10 am
saurabh-chaudhary-wins-10m-air-pistol-gold-in-asian-games

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சௌரப் சவுதிரி தங்கமும், அபிஷேக் வெண்கலமும் வென்றனர். 

இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில், ஆடவருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சௌரப் சவுதிரி (16), 240.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 

ஜப்பானின் டொமோயுகி மட்சுடா (239.7) வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் அபிஷேக் வர்மா (219.3) 3-வது இடத்தை பிடித்து, வெண்கலப் பதக்கத்தை பெற்றார். 

இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை பெற்றுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close