ஆசிய விளையாட்டு போட்டிகள்: 50மீ ரைஃபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார்

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2018 03:24 pm
asian-games-sanjeev-rajput-gets-4th-silver-for-india

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 50மீ ரைஃபிள் 3 நிலை துப்பாக்கிச் சுடு பிரிவில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங் நகரில் நடந்து வருகின்றது. ஆடவருக்கான 50மீ ரைஃபிள் 3 நிலை பிரிவு துப்பாக்கிச் சுடு போட்டியில், சஞ்சீவ் ராஜ்புத் 452.7 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்தார். 

சீனாவின் ஹுய் ஜிச்செங் 453.3 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஜப்பானின் மட்சுமோடோ டக்கயுகி 441.4 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கம் பெற்றார். 

சஞ்சீவ் ராஜ்புத், கோல்ட்கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50மீ ரைஃபிள் 3 நிலை பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close