டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெண்கலம் பெற்றார்

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2018 01:44 pm
ankita-raina-wins-bronze-in-tennis-at-palembang

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா, அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலம் பெற்றார். 

18-வது ஆசிய விளையாட்டிப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இன்று, சீனாவின் ஜாங் ஷுய் - அங்கிதா ரெய்னா மோதினர். இரண்டு மணி நேரம் நடந்த இப்போட்டியில் அங்கிதா 4-6, 6-7 (6) என்ற கணக்கில் ஜாங்கிடம் தோல்வி கண்டார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

இதன் மூலம், இந்தியா 16 பதக்கத்துடன் 9-வது இடத்தில் உள்ளது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் பிரிவில் சானியா மிர்சா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 2006ம் ஆண்டு வெள்ளி, 2010ல் வெண்கலமும் பெற்றிருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close