ஏசியன் கேம்ஸ்: 10மீ ஏர் பிஸ்டலில் ஹீனா சித்து வெண்கலம் பெற்றார்

  Newstm Desk   | Last Modified : 24 Aug, 2018 01:00 pm
heena-sidhu-settles-for-bronze-in-10m-air-pistol-event-at-18th-asian-games

2018 ஏசியன் கேம்ஸ் மகளிர் துப்பாக்கிச் சுடு போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் பெற்றார். 

இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சுடு போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் 219.2 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்தார். சீனாவின் க்கின் வாங் (240.3) தங்கப் பதக்கமும், கொரியாவின் மின்ஜுங் கிம் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் மனு பாக்கர் 5-வது இடத்தை பிடித்தார். 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹீனா சித்து பெறும் 5-வது பதக்கம் இதுவாகும். துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவுக்கு கிடைத்த 9-வது பதக்கம். இதன் மூலம் இந்தியாவுக்கு ஒட்டுமொத்தமாக 23 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close