தீபிகாவை அடுத்து ஜோஷ்னாவும் வெண்கலம் பெற்றார்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2018 04:54 pm
joshna-chinappa-also-settles-for-bronze-after-dipika-in-women-squash

ஸ்குவாஷ் அரையிறுதிப் போட்டியில் தீபிகா பல்லிகலை தொடர்ந்து ஜோஷ்னா சின்னப்பாவும் வெண்கலம் பெற்றார். 

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஸ்குவாஷ் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 1-3 என மலேசியாவின் சிவசங்கரியிடம் தோல்வி அடைந்தார். இதனால் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார் ஜோஷ்னா. 

இதன் மூலம், தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற சாதனையை தவறவிட்டார் ஜோஷ்னா. முன்னதாக நடந்த அரையிறுதி போட்டியில் பல்லிகலும் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close