ஸ்குவாஷ் போட்டியில் ஏமாற்றம்; வெண்கலம் பெற்றார் சௌரவ் கோஷல்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2018 05:25 pm
saurav-ghosal-also-settles-for-bronze-in-squash

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் தொடர்ந்து இந்தியாவுக்கு ஏமாற்றம். 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஸ்குவாஷ் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆடவர் பிரிவு போட்டியில், இந்தியாவின் சௌரவ் கோஷல் 1-2 என ஹாங்காங்கின் வூ சுன் மிங்கிடம் தோல்வி அடைந்தார். 

முன்னதாக மகளிர் பிரிவு ஆட்டங்களிலும், தீபிகா மற்றும் ஜோஷ்னா தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு மூன்று வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 

இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 27 பதக்கங்களை பெற்றுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close