ஆசிய விளையாட்டு: தடகளத்தில் ஹிமா தாஸ், முஹம்மது அனாஸ், டுட்டி சந்துக்கு பதக்கம்!

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 09:28 am
hima-das-dutee-chand-anas-win-silver-in-asiad

ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியாவை சேர்ந்த ஹிமா தாஸ், டுட்டி சந்த் மற்றும் முஹம்மது அனாஸ் ஆகியோர் தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்றனர். 

இந்தியாவிலேயே மிக வேகமான பெண்மணி என்ற சாதனையை முன்தினம் படைத்த ஹிமா தாஸ், நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இறுதி சுற்றில் இரண்டாம் இடம் பிடித்து தனது சாதனையை மீண்டும் முறியடித்தார். 50.79 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தார் ஹிமா தாஸ். 

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த 23 வயது இளம் வீரர் முஹம்மது அனாஸ், ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டபந்தயத்தை 45.24 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். 

பல சர்ச்சைகளை கடந்து வந்த இந்திய வீராங்கனை டுட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை 11.32 வினாடிகளில் டுட்டி கடந்தது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களுக்கு பிறகு, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close