400மீ உயரம் தூண்டுதலில் இந்தியாவின் தருண் வெள்ளி வென்றார்

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 06:15 pm
dharun-ayyasamy-wins-silver-in-400m-men-s-hurdles

400மீ உயரம் தாண்டுதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடந்த 400மீ உயரம் தாண்டுதலில், இந்திய வீரர் தருண் அய்யாசாமி 48.96 விநாடியில் வெற்றி இலக்கை அடைந்து 2ம் இடத்தை பிடித்தார். கத்தாரின் அப்டேர்ரஹ்மான் சம்பா 47.66 விநாடியில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

முன்னதாக தருண், பெடரேஷன் கப் போட்டியில் 49.45 விநாடியில் இலக்கை எட்டி இருந்தார். அது தான் அவரது அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது தனது சாதனை இலக்கை அவரே முறியடித்துள்ளார்.

2010ம் ஆண்டுக்கு பிறகு உயரம் தூண்டுதலில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இந்தியாவின் ஜோசப் ஆபிரகாம், உயரம் தூண்டுதலில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close