ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவின் சுதா சிங், நீனா வராகிலுக்கு வெள்ளிப் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 07:00 pm
sudha-singh-neena-varakil-clinches-silver-in-asian-games

ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங், நீனா வராகில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடந்த மகளிர் நீளம் தாண்டுதலில், இந்திய வீராங்கனை நீனா (6.51மீ) 2ம் இடம் பிடித்தார். இந்தோனேசியாவின் தி து தொ புய்  (6.55மீ) முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

மகளிர் 3000மீ ஸ்தீப்பில்சேஸ் போட்டியில், இந்தியாவின் சுதா சிங், 9:40.03 என்ற நேரத்தில் வெற்றி இலக்கை எட்டி, இரண்டாவது இடத்தை பிடித்தார். பஹ்ரைனின் விண்ப்பிரேட் யாவி (9:36.52) முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 

முன்னதாக ஆடவர் 400மீ உயரம் தூண்டுதலில் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close