ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 03:10 pm

indian-women-compound-archery-team-wins-silver-in-asian-games

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரியாவிடம் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த இந்திய மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் இன்று நடந்த வில்வித்தை இறுதிப் போட்டியில், இந்திய காம்பவுண்ட் அணி, தென் கொரியாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய மகளிர் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. 

முஸ்கன் கிறார், மதுமிதா குமாரி, ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய காம்பவுண்ட் வில்வித்தை அணி 228-231 என்ற கணக்கில் கொரியாவிடம் தோற்கடிக்கப்பட்டது.

இந்திய ஆடவர் வில்வித்தை அணியும், இறுதிச் சுற்றில் தென் கொரியாவிடம் வீழ்ந்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 45 பதக்கங்களை பெற்றுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close