ஆசிய விளையாட்டு: டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 01:46 pm
asian-games-indian-men-s-team-won-first-medal-in-table-tennis

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய ஆடவர் அணி 0-3 என கொரியா குடியரசு அணியிடம் தோல்வி கண்டது. இதனால் டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை பெற்றது. 

காலிறுதியில் ஜப்பான் அணியை 3-1 என வீழ்த்திய இந்திய அணி, டேபிள் டென்னிஸ் பிரிவில் முதல் பதக்கத்தை பெற்று தந்து, வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது. 

இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி, காலிறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வி அடைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 8 தங்கம், 16 வெள்ளி, 21 வெண்கலத்துடன் 45 பதக்கங்களை பெற்றுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close