ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு 9-வது தங்கப் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 06:31 pm
asian-games-manjit-singh-wins-gold-in-men-s-800m

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் மஞ்சித் சிங் (1.46.15) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீரரான ஜின்சன் ஜான்சன் (1.46.35) 2-வது இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். கத்தாரின் அப்தல்லா அபூபக்கர் 3-வது இடம் பிடித்தார். 

இதன் மூலம், இந்தியா 9-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. ஒட்டுமொத்தமாக 46 பதக்கங்களை இந்தியா பெற்றிருக்கிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close