ஆவணபட நடிகரானார் கெவின் பீட்டர்சண்

  கனிமொழி   | Last Modified : 29 Aug, 2018 08:59 pm
kevin-peterson-acts-in-documerntary

இங்கிலாந்தின் முன்னாள்  பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்ஸன் நேஷ்னல் ஜியாகிரஃபிக் தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.   

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்ஸன் கடந்த மார்ச் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்பு கிரிக்கெட்  போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த பீட்டர்ஸன், அவ்வப்போது அழிந்து வரும் வன விலங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு அதுதொடர்பான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

பீட்டர்ஸனுக்கு காண்டாமிருகங்கள் மீது தனி காதல் உண்டு. அவருடைய நண்பரும் முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில்  விக்கெட் கீப்பருமான மார்க் பவுச்சருடன் இணைந்து காண்டாமிருகங்கள் கணக்கெடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.   இந்நிலையில் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் “நேஷ்னல் ஜியாகிரஃபிக் சேனல் இயக்கும் காண்டாமிருகங்கள் குறித்த ஆவணப்படத்தில் நடிக்க உள்ளேன். அக்டோபர் மாதத்திலிருந்து ஆப்பிரிக்காவில் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close