ஆசிய விளையாட்டு: டூட்டி சந்த் வெள்ளி வென்றார்

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2018 06:45 pm
asian-games-dutee-chand-wins-silver-in-women-s-200m

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீராங்கனை டூட்டி சந்த் மற்றும் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் அசந்தா ஷரத் கமல் - மணிக்கா பத்ரா இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 200மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த், 23.20 விநாடியில் பந்தய தூரத்தை எட்டி, இரண்டாம் இடம் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் டூட்டி சந்த்தின் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

பஹ்ரைனின் எடிடோங் ஓடிஒங் 22.96 விநாடியில் இலக்கை அடைந்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். சீனாவின் வெய் யோங்கில் வெண்கலம் பெற்றார். 

இதே போல் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில், இந்தியாவின் அசந்தா ஷரத் கமல் - மணிக்கா பத்ரா கலப்பு இணை வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. 11-8 என்ற கணக்கில் இந்தியாவை வென்ற சீனாவின் வாங் சுக்கின் - சன் யிங்ஷா கூட்டணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close