ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு 12-வது தங்கப் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 06:24 pm
asian-games-jinson-johnson-clinches-gold-in-men-s-1500m

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 1500மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் (3:44.72) முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரரான மஞ்சித் சிங், 2ம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

இதன் மூலம், இந்தியா 12 தங்கம், 20 வெள்ளி, 25 வெண்கலத்துடன் மொத்தம் 57 பதக்கங்களை பெற்று 8-வது இடத்தை பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close