வட்டு எறிதல், 1500மீ ஓட்டப்பந்தயம், ஹாக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம்

  Newstm Desk   | Last Modified : 30 Aug, 2018 06:57 pm

asian-games-seema-punia-pu-chitra-wins-bronze-in-discus-throw-and-women-1500m

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல், 1500மீ ஓட்டப்பந்தயம் மற்றும் ஹாக்கி பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 

18-வது ஆசிய விளையாட்டில் இன்று நடந்த மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சீமா புனியா (62.26மீ தூரம்) 3-வது இடத்தை பிடித்தார். 2014ம் ஆண்டு புனியா, தங்கப் பதக்கம் வென்றிருந்தார். சீனாவின் சென் யாங் மற்றும் பெங் டின், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். 

மகளிர் 1500மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பி.யு. சித்ரா (4.12.56) மூன்றாவது இடத்தை பிடித்து, வெண்கலம் பெற்றார். பெஹ்ரைனின் கல்கிடன் மற்றும் டிஜிஸ்ட், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினர். 

நடப்பு சாம்பியனான இந்திய ஹாக்கி அணி, அரையிறுதிச் சுற்றில் மலேசியாவிடம் ஷூட்-அவுட்டில் தோல்வி அடைந்தது. இதனால் வெண்கலத்தை பெற்றது இந்திய அணி.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close