ஆசிய விளையாட்டு: இறுதிச் சுற்றில் இந்திய ஸ்குவாஷ் அணி

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 02:47 pm
asian-games-indian-women-squash-team-enters-final

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஸ்குவாஷ் அரையிறுதிப் போட்டியில், இந்தியா - மலேசியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, நிகோல் டேவிட்டை வீழ்த்தினார். இதன் மூலம், நான்கு-மகளிர் இந்திய குழு, இரண்டாவது டையில் 2-0 என வெற்றி கண்டது. இதனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஹாங்காங் - ஜப்பான் மோதும் 2-வது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். 

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக உடற்தகுதி இல்லை என்று வெளியேற்றப்பட்டார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close