படகுப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 03:46 pm
india-wins-three-medal-in-sailing-at-asian-games

ஆசிய விளையாட்டில் பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று பதக்கம் கிடைத்துள்ளது. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடந்து வருகின்றது. இன்று நடந்த பாய்மரப் படகுப் போட்டியில், மகளிர் 49er FX பிரிவில் இந்தியாவின் வர்ஷா கெளதம், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சிங்கப்பூரின் மின் கிம்பர்லி முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தாய்லாந்தின் நிச்பா வைவை, வெண்கலம் பெற்றார். 

49er ஆடவர் பிரிவில், வருண் தக்கார் அஷோக் / செங்கப்பா கணபதி கெளப்பண்டா  வெண்கலம் வென்றனர்.

ஓபன் லேசர் 4.7 கலப்பு பிரிவில், இந்தியாவின் ஹர்ஷிதா தோமர் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார். மலேசியாவின் கமன் ஷாஹ் தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ஜிங்க்ஸியோங் வாங் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

தற்போது வரை இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி, 28 வெண்கலத்துடன் 63 பதக்கங்களை பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close