ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 14-வது தங்கப் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2018 03:46 pm
amit-phangal-wins-gold-in-49kg-men-s-light-fly

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 14-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா. 

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆடவர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில், இந்திய வீரர் அமித் பங்கல், ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பேக்கிஸ்தானின் ஹசன்பாய் டஸ்மாடோவை எதிர்கொண்டார். 

ஆடவருக்கான லைட் ஃபிளை 49 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அமித் 3-2 என டஸ்மாடோவை தோற்கடித்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், இந்தியாவுக்கு 14-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

இந்தியா, 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலங்களுடன் 66 பதக்கங்களை பெற்று, 8-வது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 66 பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. 2010ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 65 பதக்கங்களை பெற்றிருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close