உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மிதர்வால் தங்கம்

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 05:35 am
om-prakash-mitharval-wins-gold-in-issf-world-championship

தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வால் 564 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 23 வயதான மிதர்வால் உலகக் கோப்பை தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். செர்பியாவின் தமிர் மைக் 562 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் டாம்யுங் லீ 560 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். 

50 மீட்டர் பிஸ்டல் அணி கள் பிரிவில் மிதர்வால், ஜித்து ராய், மன்ஜித் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1648 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித் தது. ஜூனியர் பிரிவில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி, அபித்யா பாட்டில் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.   

இதையடுத்து அஞ்சும் மௌட்கில், அபூர்வி சந்தெலா ஆகியோர் 10மீ ரைஃபில் துப்பாக்கி சுடுதலில் நான்காமிடம் பிடித்து ஒலிம்பிக் ஒதுக்கீடுக்கு தகுதி பெற்றுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனு பேகர், ஹீனா சித்து ஆகியோர் பைனலுக்கு முன்னேறாமல் வெளியேறி ஏமாற்றினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close