உலக சாம்பியன்ஷிப்: அன்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2018 04:22 pm
ankur-mittal-wins-gold-in-men-s-double-trap-at-issf-world-championship

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்குர் மிட்டல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலக  துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஆடவர் டபிள் ட்ராப் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்குர் மிட்டல், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 150 ஷாட்களுக்கு மிட்டல் 140 ஷாட் அடித்தார். தன்னுடைய கேரியரில் மிட்டலின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். சீனாவின் யியாங் யாங் வெள்ளிப் பதக்கமும், ஸ்லோவாகியாவின் ஹூபேர்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

குழு பிரிவு போட்டியில், அசாப் மற்றும் ஷர்துல் விஹானுடன் சேர்ந்து அன்குர் மிட்டல் வெண்கலம் வென்றார். 

போட்டியின் ஏழாவது நாளில் இந்தியா, 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலத்துடன் மொத்தம் 20 பதக்கங்களை பெற்றுள்ளது. சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது மற்றும் கொரியா 3-வது இடத்திலும் உள்ளன.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இந்தியா, இரண்டு ஒலிம்பிக் கோட்டாவை பெற்று இருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close