செரீனா வில்லியம்ஸை கலாய்த்து கார்ட்டூன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Sep, 2018 08:38 am
serena-williams-cartoon-in-australian-tabloid-slammed-for-being-repugnant-racist

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸை கலாய்க்கும் வகையில் கேலிச் சித்திரம் வரைந்ததாகக் கூறி ஆஸ்திரேலிய ஓவியர் மார்க் நைட் என்பவரை பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 

நியூயார்க்கில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டிகளின் இறுதிச்சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாக்கா செரினாவை வீழ்த்தி போட்டிகளில் வெற்றிவாகை சூடினார். விளையாட்டில் சரியாக விளையாடாத ஏமாற்றத்தில் வில்லியம்ஸ் தன் கோபத்தை மைதானத்திலே வெளிப்படுத்தினார். அப்போது விளையாட்டின் பாதியில் பந்தாட்ட மட்டையைத் தரையில் எறிந்த அவர், போட்டியின் நடுவரைப் பார்த்து 'பொய் சொல்பவர்', ' திருடன்' என்று தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் பாலியல் ரீதியாக வேறுபடுத்தப்படுகின்ற்னர். டென்னிஸ் விளையாட்டில் ஆண் வீரர்களைவிட வீராங்கனைகள் வேறுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர் என்று அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து செரீனா வில்லியம்ஸின் சர்ச்சைக்குரிய பேச்சு விமர்சனத்துக்குள்ளானது. 

இந்நிலையில் நடுவரை அவமதித்ததாக கூறி செரீனாவுக்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் அபராதம் விதித்தது. நடுவரின் தீர்ப்பில் தலையிட்டது, டென்னிஸ் மட்டையை முறைகேடாகப் பயன்படுத்தியது, நடுவரைச் சாடியது ஆகியவற்றுக்காக அவருக்கு 17,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து செரீனா விளையாட்டு மைதானத்தில் நடந்துகொண்ட விதம் பற்றி விளக்கும் வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓவியர் மார்க் நைட் கேலி சித்திரம் வரைந்துள்ளார். ஆட்டத்தின்போது, செரீனா ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் தான் அச்சித்திரத்தை வரைந்ததாகவும், இனவாதக் கருத்துகளைத் தூண்டுவது தமது நோக்கம் இல்லை என்றும் நைட் தெரிவித்துள்ளார். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close