உலக சாம்பியன்ஷிப்: 11 தங்கப் பதக்கத்துடன் 3-வது இடத்தை பிடித்தது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 12:50 pm
india-finishes-third-in-issf-world-championships

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளில், இந்தியாவின் சீனியர் வீரர் குர்ப்ரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் ஜூனியர் போட்டியாளர்கள் அதிக தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர்.

தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியின் கடைசி நாளில், ஆடவர் ஜூனியர் 25மீ ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் விஜயவீர் சிங் தங்கம் வென்றார். இதற்கு முன் நடந்த அணி பிரிவு போட்டியில், ராஜ்கன்வர் சிங் சந்து, ஆதர்ஷ் சிங்குடன் இணைந்து விஜயவீர் சிங் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவில், இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலங்களுடன் மொத்தம் 27 பதக்கங்கள் வென்று, மூன்றாவது இடத்தை பிடித்தது.

சீனியர் பிரிவுக்கான ஆடவர் 25மீ ஸ்டாண்டர்ட் பிஸ்டல் போட்டியில் குர்ப்ரீத் சிங், இரண்டாம் இடம் பிடித்தார். உக்ரைனின் பாவ்லோ தங்கப் பதக்கமும், கொரியாவின் கிம் ஜூன்ஹோங் வெண்கலமும் வென்றனர். அணி பிரிவு போட்டியில் இந்தியா நான்காவது இடம் பிடித்தது. 

இப்போட்டியின் மூலம், 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இரண்டு ஒலிம்பிக் கோட்டாவை இந்தியா கைப்பற்றியது. அஞ்சும் மௌடகில் மற்றும் அபூர்வி சண்டேலா, ஒலிம்பிக் கோட்டாவை பெற்றுள்ளனர். மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் அஞ்சும் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அபூர்வி, 4-வது இடம் பிடித்திருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close